Disable text selection

August 14, 2012

வன்கொடுமை

வன்கொடுமை யார் பண்ணினாலும் குற்றமே. சந்தேகம் இல்லை. ஆனால் இன்றைய இந்திய சமூகத்தில் பெண்கள் நல அமைப்புகளின் உந்துதலால் அரசு இயற்றும் சட்டங்கள் அப்பாவி ஆண்கள் (மற்றும் பெண்கள்) மீது  பாயாமல் இருக்க வேண்டுமே. 

தங்களுக்கு அலுவலகத்தில் பிடிக்காத ஆண்களை, தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என அவர்கள் நம்பும் சூட்டிகையான ஆண் பிள்ளைகளை பழிவாங்க/நீக்க பல பெண்கள் பொய்யான பாலியல் புகார் கொடுப்பது கண்கூடாக நானே பார்த்த ஒன்று.

ஆண்களை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி விட்டு, பிரச்சினை வரும் போல தெரிந்தால் அந்த ஆண் பலாத்காரம் பண்ணினான் என்று அப்படியே சற்றும் யோசிக்காமல் தான் தப்பிக்க பொய் சொல்லும் பெண்களையும் பார்த்துள்ளேன்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிச்சயம் ஞாயம் கிடைக்க வேண்டும், அவர்களை கொடுமை பண்ணின கயவர்கள் தண்டனை பெற வேண்டும். சந்தேகமே இல்லை. அதே சமயம் ஒரு பெண் என்ன சொன்னாலும் அது உண்மை என நம்பும் மனோபாவமும் மாற வேண்டும். மாறுமா?

No comments: