Disable text selection

August 16, 2012

பாரதத்தின் பொன்னோவியம் (கவிஞர் தனுசு)

 பாரதத்தின் பொன்னோவியம் (கவிஞர் தனுசு)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொன்விழா கண்டு
பாரதம்
சாதனை புரிந்தது-இந்த
பொன்னோவியம் கண்டால்-அந்த
சாதனை புரிந்தது!

சாமியே....
ஆளும் ஆசாமியே....
புன்பட்ட மனதை
நான் எதைக்கொண்டு ஆற்ற?

பார்...
துள்ளி குதிக்கும் வயது
சுள்ளி சுமக்குது!
ஏடு தூக்கும் வயது
காடு பொறுக்குது!

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையா?
உங்கள்
கண்ணும் காதும்
இன்னும் திறக்கவில்லையா?

விலை மதிப்பில்லாதது
விடலைப் பருவம்!
இவர்கள்
வீட்டில் உலை ஏறாததுக்கு
சாட்சி இந்த உருவம்!

தோள் கொடுக்கும் சமூகம்
தொலைந்து போனதா?
மீள் பதிவாய் உலகம்
மாறுகின்றதா?

இந்த
சவுக்கை தோப்பு சரித்திரம் மாறாமல்
வாள் அழிந்து
ஏவுகனை வந்து என்ன பயன்?
வான் முட்ட
கட்டடங்கள் முளைத்தும் என்ன பயன்?

இந்த
காட்டு பூச்சிகளை ஆள
ஒரு கோட்டை தேவையா?
இந்த
நாட்டு செடிகளை காக்க
கோட்டும் சூட்டும் தேவையா?

-தனுசு-

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

தங்களது பாணியில் மிக அற்புதமானதொரு கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரர் தனுசு அவர்களே. வார்த்தைகளின் வேகம் அருமையாக இருந்தது.

thanusu said...

நன்றி சகோதரி பார்வதி அவர்களே. இது போன்ற பின்னூட்டங்களே என்னை இன்னும் ஆழ்ந்து எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றிகள்.