Disable text selection

January 1, 2013

கலாசாரம், அன்றும் இன்றும்

அன்று பாஞ்சாலி சபதம்/திரௌபதி வஸ்த்ர-ஹரணம் சினிமாவில் நடிக்க எந்த தமிழ்ப்பெண்ணும் முன் வரவில்லை. கேட்ட போது அவர்கள் சொன்னார்கள் – “என்னுடைய சேலை முந்தானையை, நடிப்பிற்க்காக கூட ஒரு அந்நிய ஆண்மகன் தொடுவதை நான் அனுமதிக்க முடியாது!”.... இதுவன்றோ கற்பின் மாண்பு. இத்தகைய பெண்களை நான் வணங்குகிறேன்.

“வயசு வந்த பொண்ணுக்கு தம்பியே ஆனாலும் தள்ளித்தான் நிக்கணும்”
என்று வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். ஆனால் இன்று? நடிப்பு எனும் பெயரில் கண்டவனோடு உரசி, அணைத்து, கட்டிப்புரண்டு.....

ஆபாசமான படங்களால் பெண்ணினம் அசிங்கப்படுத்தப்படுகிறது என்று சாடும் முன், அந்தப்படத்தில் ஒரு பெண் நடிக்கிறாளே, அவளை உங்களால் தடுக்க இயலுமா? அங்கே, பெண்ணை போகப்பொருளாக சித்திரிக்க ஒரு பெண்ணும் ஒத்துழைக்கிறாள் என்பதை யார் மறுக்க இயலும்? பழைய தமிழ்ப்பெண் போல “முடியாது” என்று எல்லா பெண்களும் சொல்வது தானே?

பெண்ணுடலை போகப்பொருளாக சினிமாக்கள் சித்திரிக்கின்றன. இதை பார்க்கும் இளம் உள்ளங்கள் என்ன நினைக்கும்? பெண் என்பவள் போகப்பொருள் என்று தானே இன்றைய குழந்தை – நாளைய இளைஞன் நினைப்பான்?

பெண்களின் அம்மாக்களுக்கும் ஒரு பங்கு உண்டு. தாங்கள் படாத கஷ்டத்தை பட்டு உழன்றதாக நினைத்துக்கொண்டு “உனக்கென்னடி ராஜாத்தி, படிப்பிருக்கு, சம்பாதிக்கறே, யாருக்கும்/எவருக்கும் நீ அடங்கிப்போக வேண்டியதில்லை” என்று மகளை கொம்பு சீவி விட்டு வளர்த்தெடுத்ததின் பலனை இன்று நாம் காண்கிறோம்.

“அனுசரிச்சுப்போம்மா” என்று சொன்ன காலம் போய், “எதா இருந்தாலும் பாத்துக்கலாம், நாங்க இருக்கோம்” என்று மல்லுக்கட்டும் மனோபாவத்தோடு பெண்களை அனுப்புவது. இவர்கள் நல்ல கணவனையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து தனது வாழ்க்கையையும் பாழாக்கி பிறர் வாழ்வினையும் கெடுக்கிறார்கள்.

நல்ல பெண்களும் இருக்கிறார்கள். அவர்களையே நான் காண விரும்புகிறேன்.

பெண்மை பூத்துக்குலுங்கும் பெண்களும், உண்மையான ஆண்மை மிளிரும் காளைகளும் சந்தித்தால் அங்கே சண்டையே இருக்காது. இன்றைய பிரச்னை ஆண்மை மேவிய பெண்களும், பெண்மை மேவிய ஆண்களும் தான்.

அனுபவம் உடைய, நிறைந்த குடும்ப வாழ்வில் ஊறித்திளைக்கும் நற்குலப்பெண்கள் நான் சொல்வதை ஆமோதிப்பர். பெண்ணிய புலிகள்  பாய்வர்.   

9 comments:

Unknown said...

A very true fact

Unknown said...

A VERY TRUE FACT. YOUR WRITINGS ARE VERY NICE

Thanjavooraan said...

மிகவும் உண்மையான, யதார்த்தமான கருத்துக்கள். கதைகளில் காவியத்தில் வரும் காதலைப் போற்றியும், வழிதவறிய பெண்களின் வாழ்வை எண்ணி கண்ணீர் விடுவதும் நம் பழக்கம். ஆனால், நம் கண் எதிரில் வாழும் இப்படிப்பட்ட பெண்களை ஏற்றுக் கொள்வதுமில்லை, அவர்கள் செயலை ஆதரிப்பதும் இல்லை. யதார்த்த வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு. பெண்களின் வளர்ப்புக்குத் தாய்மார்களே பொறுப்பானவர்கள் என்பது முழுக்க முழுக்க உண்மை. சில தாய்மார்கள் தங்கள் பெண்களைக் கொம்பு சீவிவிட்டு கணவனையும், அவன் குடும்பத்தையும் துச்சமென எண்ண வைக்கும் தீங்கை செய்துவிட்டுப் பின்னர் அதன் விளைவுகளைக் கண்டு ஐயோ, அம்மா என்று அலறுவதால் என்ன பயன். நமது பாரதப் பண்பாடு சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு காலங்காலமாக நடைமுறைப் படுத்தி வருகிறது. பெண்கள் என்பவள் அடிமையோ அல்லது ஆணுக்குக் குறைந்தவர்களொ அல்ல என்றாலும், ஆணோ, பெண்ணோ தத்தமக்கு உரிய பண்பு, வாழ்க்கை முறை இவற்றை அளவுகோலாகக் கொண்டு பிறருக்கு ஆதர்சமாக வாழ்வதே நல்லது. மேலை நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, அவர்களது பழக்கம் வழக்கம் இவற்றையெல்லாம் பார்க்கவோ, ரசிக்கவோ, பாராட்டவோ அல்லது இகழவோ செய்யலாமே தவிர அவற்றை நம் வாழ்க்கையில் உட்புக வைத்துவிட்டால் வாழ்க்கை துன்பமயமாவதைத் தடுக்க முடியாது. நம் நாட்டில் பெண்களைத் தெய்வமாக மதிக்கப் பழக்கப்பட்டு விட்டோம். சுவாமி விவேகானந்தர் சொல்வார், "நம் நாட்டில் மனைவியைத் தவிர மற்ற எல்லா பெண்களும் தாய்களாகப் பார்க்கவும்; ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத் தவிர மற்ற ஆண்களைத் தன் பிள்ளைகளாகவும் பார்க்க வேண்டும்". பெண்மையைப் போற்றும் அதே சமயத்தில் நாகரிகம் எனும் பெயரால் அவர்கள் தடம் மாறிப் போவதையோ, ஆண்கள் பண்பாடு நீங்கி மிருகங்களாக மாறுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. நடுநிலை மாறாமல் பெண்களும், ஆண்களும் நமது பாரதப் பண்பாட்டை உணர்ந்து செயல்படுவார்களானால் எந்தத் தொல்லையும் இல்லை. தங்கள் கட்டுரை நன்று! வாழிய நீவிர்!!

kmr.krishnan said...

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை விஞ்ஞானி புவனேஷ் அவர்களே.
காலம் மிகவும் மாறிவிட்டது.நகரத்தில் வாழும் பெண்களின் மனப் போக்கில் பல
வேறுபட்ட நிலைப்பாடுகள். இது ஒரு சுழற்சி. வண்டிச் சக்கரம் மீண்டும் பழைய முறைக்குத் திரும்ப ஒரு முழு சுற்று சுற்றித்தானே ஆக வேண்டும்?

Unknown said...

Will take time to complete a circle, may be generations

Unknown said...

It will take generations to complete a full circle

BD said...

@ Thanjavooraan

தங்கள் மேலான வருகைக்கும், பொருள் செறிந்த பின்னூட்டத்துக்கும் நன்றி, ஐயா :)

BD said...

@ kmr.krishnan:

தகங்கள் மேலான வருகைக்கு, பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. என்ன தான் சக்கரம் சுற்றும் எனினும், நம்மால் இயன்ற பிரேக்கை போடலாமே! அந்த முயற்சி தான் இந்த பதிவு!

BD said...

Saraswathi bala:

Thanks for having come over and commented, mami! :)